இவ் உருவங்களுக்கு உயிர் கொடுக்க முடியுமா? (பட இணைப்பு)
Posted by Vimal on März 3rd, 2011 09:07 PM | No Comment
களிமண், சீமெந்து, பனிக்கட்டி போன்றவற்றால் உருவங்கள் செதுக்குவது பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதனைக் கண்டும் உள்ளோம். ஏன் பாடசாலைப் பருவத்தில் கிளேயால் கூட உருவங்கள் செய்து விளையாடியிருக்கிறோம். ஆனால் பொலித்தீனாலான உருவங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த உருவங்கள் இழுபடக்கூடிய பொலித்தீன்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொலித்தீன் உருவங்கள் பெருமளவில் போட்டிக்கு விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலித் தோற்றத்தில் பிறந்துள்ள குழந்தை (காணொளி, பட இணைப்பு)
Posted by Vimal on März 3rd, 2011 08:25 AM | No Comment
இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களே நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது.
மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான ...
ஆந்திர சிவன் கோவிலில் திரிசூலத்தில் தவறி விழுந்து சென்னை பக்தர் பலி
Posted by Vimal on März 3rd, 2011 07:23 AM | 2 Comments
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே சதாசிவகோனை அருவி உள்ளது. இதன் அருகே உள்ள சதாசிவேஸ்ரசாமி கோவில் உள்ளது.
ஆண்டு தோறும் இக் கோவிலில் மகாசிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதே போல் நேற்றும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
அப்போது சென்னை தி.நகரை சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு ...
மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு
Posted by Vimal on März 3rd, 2011 06:25 AM | No Comment
கொசுக்கள் மூலம் பரவும் ப்ளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற ஒட்டுண்ணியின் மூலம் மலேரியா நோய் பரவுகிறது. உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் உலக சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுப்புது மருந்துகளும் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் "சீ வீட்" என்ற கடல் தாவரம் மலேரியா காய்ச்சலை எளிதாக ...
சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும்
Posted by Vimal on März 2nd, 2011 10:04 PM | No Comment
சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
சைபர் குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டத்திற்கு சுவிஸ் பாராளுமன்றம் பூரண ஆதரவினை வழங்கியுள்ளது.
கணனி ஹெக்கர்கள், தரவுகளை திருடுவோர் மற்றும் இணைய சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு சர்வதேச நாடுகளின் ...
வெளிநாட்டுப் பெண்ணிடம் தகாத செயல்: மாணவர் மூவருக்கு விளக்க மறியல்
Posted by Vimal on März 2nd, 2011 07:54 PM | 1 Comment
பருத்தித்துறை, தும்பளை மேற்குப் பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் உத்திரவிட்டுள்ளார்.
பருத்தித்துறையில் இயங்கும் வெளிநாட்டு உதவி நிறுவனத்தில் வைத்தியராகப் பணிபுரியும் பெண் கடலில் குளித்துக்கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மூவர் குறிப்பிட்ட பெண்ணுடன் தகாத முறையில் நடக்க ...
மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வரமாட்டோம்! கற்பூரம் கொளுத்தி கோவிலில் சத்தியம் செய்த ஆண்கள்
Posted by Vimal on März 2nd, 2011 10:03 AM | No Comment
நீலகிரி மாவட்டம் கூடலூர் இரும்புபாலம் பகுதியை சேர்ந்த குடும்பத்தலைவர்கள், "மது குடித்து விட்டு கோவிலுக்கு வருவதில்லை' என, சூடம் ஏற்றி சத்தியம் செய்தனர்.
கோவில் திருவிழாவில் ஏற்படும் பிரச்னைக்கு மூல காரணமாக இருப்பது போதை தான். மது குடித்தவர்கள், கோவில் விழாக்களுக்கு வராமல் இருந்தாலே, பெரும்பாலான திருவிழாக்கள் அமைதியாக நடந்து விடும்.
இதற்கு முன்உதாரணமாக, கூடலூர் இரும்பு பாலம் ...
புதிய பாதையில் பிரவேசிக்கும் இன்டர்நெட்!
Posted by Vimal on März 2nd, 2011 08:21 AM | No Comment
இந்த உலகம் புதியதொரு இணையம் ஒன்றைக் காணப் போகிறது. தற்போது பின்பற்றப்படும் இணைய முகவரி அமைப்பு விரைவில் முற்றிலுமாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய வழி வகை தொடங்கப்பட உள்ளது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும், அதனை தனி அடையாளம் காட்டும் முகவரி ஒன்று தரப்படுகிறது. இதற்கென உலக அளவில் ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
Internet Protocol version ...
வீசா மோசடியில் ஈடுபடும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக பிரித்தானியா அரசு கடும் நடவடிக்கை
Posted by Vimal on März 2nd, 2011 08:02 AM | No Comment
போலி ஆவணங்களை சமர்ப்பித்து வீசா பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கை மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அராசங்கம் அறிவித்துள்ளது.
மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்வதற்காக போலியான ஆவணங்களை சில இலங்கை மாணவர்கள் சமர்ப்பிப்பதாக பிரித்தானிய எல்லை முகவர் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதத்தில் போலியான முறையில் மாணவர் வீசாக்களைப் பெற்றுக் கொள்ள முயன்ற ...