உருக்குலைந்த நிலையில் செம்பியன்பற்றில் சடலம் மீட்பு
Posted by Vimal on Dezember 8th, 2020 08:10 PM | No Comment
வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று இன்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது.செம்பியன்பற்று கிராமத்திற்கும் தனிப்பனை கிராமத்திற்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று எலும்புக்கூடாக கரையொதுங்கியுள்ளது.இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளைப் பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையினை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
காலநிலை காரணமாக கிளிநொச்சியில் பல குடும்பங்கள் பாதிப்பு
Posted by Vimal on Dezember 7th, 2020 01:36 PM | No Comment
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று (06) 4 மணி வரை 1,926 குடும்பங்களை சேர்ந்த 5,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.அத்துடன் 3 வீடு முழுமையாகவும், 276 வீடுகள் பகுதியளவிலும் சேதம்மைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை 2 பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களை சேர்ந்த 134 ...
தம்புள்ள வைகிங் காலி க்ளாடியேடர்ஸ் அணிகள் மோதின
Posted by Vimal on Dezember 6th, 2020 12:00 AM | No Comment
லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் 12வது போட்டியில் (05-12-20) தம்புள்ள வைகிங் – காலி க்ளாடியேடர்ஸ் அணிகள் மோதியிருந்தன.இப்போட்டியில் ஒருகட்டத்தில் காலி அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்த போதிலும் இறுதிநேரத்தில் முக்கிய விக்கெட்களை சரித்து தம்புள்ள அணி 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் முதலில் ஆடிய தம்புள்ள அணி தரங்க – ...
வவுனியாவில் ஆற்றை பார்க்க சென்ற இளைஞன் நீரில் மாயம்
Posted by Vimal on Dezember 4th, 2020 11:56 PM | No Comment
வவுனியா – பேராறு நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.தனது நண்பர்களுடன் இன்றையதினம் (04) மதியம் குறித்த ஆற்றுக்கு மாணவன் சென்றுள்ளார். இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் ...
வைத்தியசாலையில் தப்பி சென்ற கைதி மீண்டும் கைது!!!
Posted by Vimal on Dezember 3rd, 2020 07:18 PM | No Commentசீரற்ற வானிலை காரணமாக 10 குடும்பங்கள் பாதிப்பு
Posted by Vimal on Dezember 2nd, 2020 04:14 PM | No Comment
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் சீரற்ற வானிலை காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.இன்று (02) பிற்பகல் 3.30 மணிவரை பதிவான தகவலின் அடிப்படையில் இப்புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.2 குடும்பங்களை சேர்ந்த 9 ...
வாடியடியை சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்பு
Posted by Vimal on Dezember 2nd, 2020 03:37 PM | No Commentதிருகோணமலையில் மதில் இடிந்து வீழ்ந்து சிறுவன்பலி
Posted by Vimal on November 28th, 2020 05:55 PM | No Comment
திருகோணமலை – புளியங்களம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் சிறுவன் பலத்தக் காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டியின் வெற்றி சுப்பர் ஓவரில் வென்றது கொழும்பு கிங்ஸ்!
Posted by Vimal on November 27th, 2020 08:04 AM | No Comment
லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.சமநிலையில் முடிவுற்ற இந்த போட்டியை சுப்பர் ஓவர் முறையில் நான்கு ஓட்டங்களினால் கொழும்பு வெற்றி கொண்டுள்ளது.போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.அணி சார்பில் அதிகபட்சம் ...
படுகாயமடைந்த அரச உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த சோகம்
Posted by Vimal on November 25th, 2020 11:47 AM | No Comment
மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) என்பவரே சிகிச்சை பலன் ...