தண்ணீர்!! தண்ணீர்!! தண்ணீர்!!
Posted by Vimal on April 27th, 2013 09:06 PM | No Comment
நீ அதிசயம் மட்டுமல்ல ... நீ ஆச்சரியமான ஆசான் .... உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே .... உன் பாகுபாடில்லாத அணுகு முறையால் நீ போகும், நிற்கும், நடக்கும், ஓடும் இடமெல்லாம் சுகமே .... நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை அதனால் நீ தளர்வதுமில்லை பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும் உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி .... சுத்த தங்கமாக நீ வலம் ...
எனது முதல் கவிதை இந்த இணையத்தில் ….
Posted by Nemi on September 6th, 2012 04:18 PM | No Comment
சைவப்பா எங்கள் பாட்டப்பா எங்கள் ஊரினில் உம்மை புகழ்ந்திடும் நாளில் பாலையும் பழத்தையும் வாழ்த்துவோம் நாமும் . சைவப்பா எங்கள் பாட்டப்பா
எங்கள் ஊருக்கு நீர் செய்த புண்ணியம் கோடி .அதில் நீர் பட்ட இன்பங்கள் ஆயிரம் கோடி. சைவப்பா எங்கள் பாட்டப்பா,
சிறுப்பிட்டி சிறுபிள்ளை நெஞ்சினில் கூட.உங்கள் நாமங்கள் என்றென்றும் நிலைத்திடும் பாரும் . சைவப்பா எங்கள் ...
இந்த இணையத்துக்கு கிடைத்த உண்மைக்காதல் கவிதை ஒன்று
Posted by Vimal on September 3rd, 2012 08:07 PM | No Comment
பன்னிரண்டு வயதில் பார்த்தவள் – என்
பார்வையிலே அவள் பூத்தவள்!
கண்ணிரண்டு விழியால் கதை சொன்னவள் – என்
கவிதைக்கு முகவரி அவள் ஆனவள்!
ஐந்து வயதில் என் அறிமுகம்
ஆசைப்பட்டாள் அவள் என்னிடம்!
எண்ணிரண்டு வயது வரும்வரை
எண்ணி என்னைத் தினமும் இருந்தவள்!
பள்ளி செல்லும் போது பார்த்தவள்
பருவ மங்கை தான் இவள்!
வெண் நிலவுக்கு எதிர் ஆனவள்
வெள்ளிக்கிழமையில் தனி இவள்!
காவிரி ஆற்றின் பின்னல் கொண்டாள்
கங்கை ...
புதியதோர் உலகம் செய்வோம் ……தமிழ்நேசன் (1998)
Posted by Vimal on September 2nd, 2012 08:54 AM | No Comment
புதியதோர் உலகம் செய்வோம்
புன்னகை தினமும் மலரச் செய்வோம்
வறுமையை போக்கச் செய்வோம்
வாழ்க்கையை வெல்லச் செய்வோம்
சிறுமை வாழ் நீங்கச் செய்வோம்
சிந்தனை நிதம் வளரச் செய்வோம்
விண்வெளி தன்னில் செல்வோம்
வீரனாய் என்றும் வாழச் செய்வோம்
ஒருவனின் வழியில் செல்வோம்
உண்மைதனை உலகிற்கு சொல்வோம்
அன்னையை மதித்தே செல்வோம்
அன்னை மண் காத்தே வெல்வோம்
புதியதோர் உலகம் ...
எங்கள் சிறுப்பிட்டி மக்களுக்காய் இணைவோம் ஒன்றாக
Posted by Vimal on August 10th, 2012 04:17 PM | No Comment
ஊரும் உறவும் இணைந்தால் தானே
உயரும் வாழ்வு நன்றாகும்
தேரில் ஏறிய தெய்வத்தை நாங்கள்
கூடி இழுத்தால் இடம் சேரும்
அந்த உண்மை ஊருக்கும் பொருந்தும்
சிந்தை தெளிந்தால் ஊரும் செளிக்கும்
காற்றிலும் மழையிலும் கல்வயல் நிலத்திலும்
சேற்றிலும் சிதைவிலும் சில்லறைபெருக்கி சேர்த்த வருவாயால்
வெளிநாடு வேர்வை சிந்தியே உழைத்த மக்களோ வாடியே நிற்க்கிறார்
அதைப்பாரு நாம் ஓடி வந்ததால் பெரும் வாழ்வு தேடாத செல்வம்கூடி வந்ததால்
ஊர்வாழ்த்;த நினைவதை ...
வாழும் போதே மண்ணுக்காய் வாழ்…
Posted by Vimal on August 7th, 2012 10:45 PM | No Comment
உன்பெயரும் ஊர் மக்கள் உள்ளத்தில் எழுதப்படும்
வளம் சேர்க்கும் செயலை செய்
உன் மனம் தன்னில் ஆயிரம் யென்மம் வாழந்த நிறைவிருக்கும்
வளம் கொண்ட மனம் உள்ள மனிதனாய்
நாம் வாழாவிட்டாலும்
நல்மனம் கொண்ட மனிதராய் நாம் வாழ்வதே நன்று
குலம் காப்போம் குடிமனை காப்போம்
ஊர் காப்போம் நம் உறவைக்காப்போம்
நாம் வாழ்ந்த நிலை உணர்வோம்
ஊர் பேதம் மறப்போம்
ஒற்றுமையாய் மனம் இணைவோம்
அதன்பின் ஒன்றுபட்டுக் கரம் இணைப்போம்
பலம் ...
விருப்பையும் வெறுப்பையும் வீட்டோடு நிறுத்து
Posted by Vimal on Juli 30th, 2012 11:49 AM | No Comment
ஊரை இணைக்கவும்
உறவை இணைக்கவும்
உதித்த இணையம் இந்த இணையம்
வடக்கும் வேண்டாம்
மேற்க்கும் வேண்டாம்
வந்து இணையட்டும் நல்ல மனங்கள்
இருட்டில் வாழ்ந்த முந்தையர்போல்
மந்தைகளாக நாமும்வேண்டாம்
கருத்தில் நல்ல சிந்தையுள்ளவர்
கலந்தால் மட்டும் எமக்குப்போதும்
விருப்பு ஒருவர் விருப்பு அல்ல
விலைகள் பேசி முன்னே நிற்க
கருத்து முரன் பாடுகள் தேவை அல்ல
ஊருக்கு உதவி முன்னேற்றிச்செல்ல
விருப்பையும் வெறுப்பையும் வீட்டோடு நிறுத்து
வீண்வாதம் செய்வதை அடியோடு தகர்த்து
கருத்துள்ள விடையத்தில் சிந்தையை நிறுத்தி
காரியம் நடக்க ...
தாய்க்குப்பின் தமிழாக இருந்த தமிழ்
Posted by விமல்ராஜ் on Juli 18th, 2012 05:46 PM | No Comment
தாய்க்குப்பின் தமிழாக இருந்த தமிழ்... சேற்றுக்குள் புதையுண்டு... தலை மட்டும் வெளியுண்டு... தமிழுக்கு ஏன் இந்த நிலை... தாயை வைபவனும் தமிழை கொல்பவனும்... தரணியில் தங்கிட தகுதியற்றவன்... தமிழனாக நீ இருந்தால் தமிழ் என்று சொல்லிப்பார்... இதுவரை காணாத தமிழனின் வீரம் இறுதிவரை காண்பாய்... ஈனப்பிறப்புக்கள் சிலவுண்டு... அவை கட்டுக்குலையாத மெட்டழகி தமிழுக்கு... புதியதோர் இலக்கணம் ...
மழலை அன்பு…..போராடும் அம்மா
Posted by Vimal on Juni 4th, 2012 10:19 AM | 1 Comment
துங்கா இரவுகள்
காத்திருக்கும் கண்கள்
எப்போது வருவீர்கள்
என
விடிந்திடும் பொழுதுகள்
காயங்களும் ,கண்ணீரும்
நெஞ்சத்தின் நினைவுகளுடனும்
போராடும் அம்மா.
நித்தமும் உங்களின்
முத்தமும் ,அன்பும்
தொலைபேசியில்
மட்டும்
சுவைத்திடும் நாள்
நேசமாக நான்
காத்திருக்கிறேன் அப்பா.
உறக்கத்திலும் உங்களை
நான்
தழுவிடும் நினைவால்
தலையணை கூட அழுகிறது .
பாடு பட்டது போதும்
வாழ்வின் சொர்க்கம்
எது என்று
எங்கு வந்து
என்முகம் பாருங்கள் .
உங்கள்
வெளிநாட்டு
வாழ்க்கை எம்மை
தனியாக தவிக்க
விட்டுத் தருகின்ற செல்வமது
செல்லாக் காசாக
என் மனதை
உருக வைக்கிறது அப்பா
சீக்கிரம் வந்து விடுங்கள்
சிறு தொழில்
செய்தாவது இங்கே
சிரிப்புடன் வாழ்ந்திடலாம் .
கல் மனையும் ...
நாளை என்பது நம் கையில் இல்லை! இன்றே…
Posted by Nemi on Mai 17th, 2012 08:20 AM | No Comment
யார் மீதேனும் வருத்தமா
யாரோடேனும் சண்டையா
சரி செய்ய யாரும் இல்லையா?
நீங்களே முயலுங்கள்
உடன் சரி செய்ய!
இன்று அவரும் விரும்பலாம்
உங்களுடன் நட்பாயிருக்க
இன்றில்லையென்றால்
நாளை காலம் கடந்து போய் விடலாம்!
யாரையேனும் நேசிக்கிறீர்களா,
அவருக்கு அது தெரியாமலே?
உடனே சொல்லி விடுங்கள்
இன்று அவரும் உங்களை நேசிக்கலாம்
நாளை காலம் கடந்து விடக்கூடும்!
உங்களை மறந்து விட்டாரென்று எண்ணும்
நண்பர் மீது இன்னமும் நட்பா?
உடனே சொல்லி விடுங்கள்!
அவர் ...













