பிறேமா இராசரத்தினம்: அன்னையருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Posted by Vimal on Mai 10th, 2015 09:28 AM | No Comment
ஆயிரம் சொந்தங்கள் அரவணைக்க இருந்தாலும்
உன்னைப்போல் போல் அன்புகாட்ட
ஒருவரும் இல்லை அன்னையே,,,
அன்னையர் தினமாம் இன்று
நாம் பெற்ற செல்வங்கள்
அன்புடனும் புன்னகையுடனும்
ஓர் பொருளை கைநீட்டி
வாழ்த்துக் கூறவே,,,,
அந்தப் பரிசை பாசத்துடன்
ஏற்று திறந்து பார்க்கும் போது
மனம் மட்டற்ற மகிழ்ச்சி
அடையுதே,,,,
அம்மா இல்லாத ஆதரவற்ற பிள்ளைகளையும்
இவ்வேளையில் மனதில் நிறுத்தியபடி,,,,.
உலகத்தில் வாழும் எல்லா அன்னையருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,.
ஆக்கம்சிறுப்பிடி மண்தந்த முன்னாள் ஆசிரியையும் கவிஞருமான பிறேமா இராசரத்தினம்:
அறிவோம் நம் மொழியை: நீரின் தூணும் காலும்
Posted by Vimal on April 17th, 2015 10:39 PM | No Comment
சிறு இடைவெளிக்குப் பிறகு வாசகர்களை இந்தப் பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி! இந்த வாரத்திலிருந்து ‘அறிவோம் நம் மொழியை’ பகுதி வெள்ளிக்கிழமைகளில் வெளியாகிறது. ஐம்பூதங்களில் காற்றுக்கு அடுத்ததாக நீர் குறித்த பதிவுகளைச் சில வாரங்களாகக் கண்டுவருகிறோம். நீரின் கவித்துவமான இரண்டு அவதாரங்களை இந்த வாரம் காணலாம்.
ஈழம், தமிழுக்கு வழங்கியிருக்கும் சொல் வளம் மிகவும் சிறப்பானது. ஈழத்து நாட்டார் ...
அழும் குரல் கேட்கிறதா…
Posted by Vimal on Januar 19th, 2015 05:13 PM | No Comment
வாய் உலர்ந்து போகிறது
நா வரண்டு போகிறது....
தாகமாய் இருக்கிறது.....
தண்ணீர் உயிர் தங்கிட தண்ணீர்!!
எத்தனை வலிகளை சுமப்பது.....!!
நச்சுப் புகையின் எச்சங்கள் போகவில்லை நம் உயிர்க்காற்றில்.....
நாம் பருகும் தண்ணீரில்
நச்சுக் கலப்பது
நாம் செய்த பாவமோ?
வரலாற்று துயரமாய் மாறுமுன்னே
வழி விடுங்கள் மனச்சாட்சிகளே!!!!
புட்டிப் பால் கேட்டு அழவில்லை
பசிவந்தும் அழுததில்லை.....!!
பச்சை தண்ணீர் கேட்கும் பாலகர்கள்............
அழும் குரல் கேட்கிறதா..,...!!
பசி மறந்து ருசி காண்பர்
என் கிணற்று தண்ணீர் போதும்
என்று ...
பிழைக்க வேறு வழியில்லை!!:படித்ததில் பிடித்தது
Posted by Vimal on Dezember 10th, 2014 11:54 AM | No Comment
கிளிஞ்ச பாய்
பழஞ்சோத்து நீர்
ஆனாலும் கூட
கனவுக்குடித்தனத்துக்கு
கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்;
ஊர் சுற்றும் தம்பியால்
பீடி சுத்தும் அம்மா
காச நோய் கண்டதனால்
பேசாப்பொருளான அப்பா
சீதனம் கேட்டுவரும்
தவணை முறைத் துன்பத்தால்
வாழாவெட்டியாய் வாழும் அக்கா
போருக்குப் பேர் போன தேசத்தில்
காணாது போன கணவன்
பசிதான் மூத்த ...
எதை இங்கு நாம் கண்டோம்…..!
Posted by Vimal on Dezember 3rd, 2014 04:43 PM | No Comment
எதை இங்கு நாம் கண்டோம்...!
வந்தோம் இங்கு
வாழ வந்தோம்....
பேதம் தான்
ஏன் கொண்டோம்.....
ஆண் பெண் பேதம்
எங்கும் இது வாதம்
எங்கே தொலைத்தோம்
எம் சுதந்திரம்...
தொலைந்த இடம் தேடாது
எதை இங்கு நாம் கண்டோம்....!
மதம் பிடித்த யானைகளாய்
மத த்தின் பேரால்
ம மதை கொண்டு
மானிடத்தை அழித்து
எதை இங்கு நாம் கண்டோம்.....!
ஆணவம் வார்த்தைகளில்
ஆதிக்கம் செயல்களில்
அன்பை தொலைத்து
அகந்தை கொண்டு
ஆற றிவு படைத்த நாம்
எதை இங்கு நாம் கண்டோம்...!
ஏழை பணக்காரனென
ஏனிந்த ...
படித்ததில் பிடித்தது:பேஸ்புக்கில் சுட்டது
Posted by Vimal on November 13th, 2014 09:35 PM | No Comment
அப்பான்னு நினைச்சேன்
அசிங்கமாய் தொட்டான்....!
சகோதரன்னு பழகினேன்
சங்கட படுத்தினான்......!
மாமான்னு பேசினேன்
மட்டமாய் நடந்தான்......!
உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!
பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்.....!
ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்.....!
நட்பு கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!
மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைபேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே .....!
கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்..!
அலறி ஓடுகிறேன்..
எங்க போவேன்?
சமத்துவம் வந்ததென
சத்தமாய் கூறுகின்றனர்....!
பெண்னை பெண்ணாக
பார்க்காமல்
மனிதராய்
பார்ப்பது எக்காலம்?
பாவிகளின் பாலியல்
வன்முறை என்று ஓயுமோ??
கவி படைத்த உறவுக்கு எமது நன்றிகள்
நானும் நீர்வை மகனென்று!!……….படித்ததில் பிடித்தது
Posted by Vimal on Juni 3rd, 2014 02:23 PM | No Comment
விளிம்பில் ததும்பும் பனித்துளிகள் சொட்ட
விரைவு வானம் கதிர்கள் உதிர
முத்திப்பூக்கள் சொட்டும் தேன் உறிஞ்சி
வாழ்க்கையே வாழையாய்ப்போன நம்மூரு
பதமரும்ப காத்திருந்து கொய்த குலைகள்
இதமாய் இருக்கை கட்டி - அதிவிரைவாய்
பட்டிமாடு படையிடையே பச்சைய ஊர்வலம்
கண்கொள்ளாக் காட்சி தரணியில் சொற்பம்தான்
கோமயம் கோமியம் தெருப்புழுதியுடன் சேர்ந்து
ஊரெல்லாம் மணம் பரவிட உலாவந்தகாலம்
நேற்றுவரை இரகசியமாய் என்னுள்ளிருந்து
பாடாய்படுத்துகின்றன - எழுதிவிட
புலரும் பொழுதில் அலறும் கண்டாமணியோசை
நாற்திசையும் - கண்விழிக்க ...
கலைஞனும் கடவுளும் ஒன்றே
Posted by Vimal on April 23rd, 2014 11:45 PM | No Comment
கலைஞனும் கடவுளும் ஒன்றே இக்கருத்திற்கு உடன்படாமல் இருக்கவே முடியாது..கடவுள் காலத்தை கணிக்கின்றான் கலைஞன் காலத்தை பிரதிபலிக்கின்றான் இதுவே உண்மையும் கூட...
ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் கடவுளால் என்பார்கள் அது ஒரு கலைஞனாலும் முடியுமே.ஏனென்றால் தனது கருத்துகளின் ஊடாக வழிகாட்டியாக நின்று சமூகத்தை வளர்த்துக் கொள்கின்றான்.
கலைஞன் கோவில் என்றால் கலைதான் கடவுளே.ரசிகனாய் வாழலாம் கலைஞனாக வாழ்வதே கடினமான பயணம் ...