மிதிவண்டியில் பயணித்த முதியவர் மயங்கி விழுந்து மரணம்
Posted by Vimal on Februar 20th, 2021 06:10 PM | No Comment
யாழ்நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையில் இருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்க சென்ற 75 வயதுடைய முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் .கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த ...
யாழில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் மரணம்
Posted by Vimal on Februar 7th, 2021 04:56 PM | No Comment
யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது.மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது.உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பாலத்தினால் யாழில் இணையப் போகும் இரு தீவுகள்
Posted by Vimal on Februar 4th, 2021 07:54 PM | No Comment
இலங்கையின் வடக்கே பெரும் தீவுகளாக விளங்கும் காரைநகரும் வேலணைத்தீவும் கடற்பாலம் மூலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி காரைநகர் மற்றும் வேலணைத்தீவில் உள்ள ஊர்காவற்துறை ஆகியவற்றுக்கான போக்குவரத்தை சரிசெய்யும் நோக்கில் கடற்பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் இந்த பாலத்திற்கான மதீப்பீட்டுப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இதற்கான நிதி வந்தவுடன் ...
யாழில் கட்டிடம் இடிந்து வீழ்ந்து நபர் பரிதாபமாகப் பலி
Posted by Vimal on Januar 25th, 2021 06:58 PM | No Comment
யாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.இந்தச் சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன் பிரகலாதன் , வயது 40 என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் வருகை தந்து தமது காணியில் ஏற்கனவே அமைந்திருந்த பழைய கட்டிடத்தை ...
மழையாழில் தொடரும் ஆராய்ச்சி நிலையம் அறிவிப்பு !!!
Posted by Vimal on Januar 13th, 2021 12:40 PM | No Comment
யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்.யாழ் மாவட்டத்தில் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது .இன்று காலை காலையிலிருந்து தற்போது வரை யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 ணித்தியாலத்திற்கு இந்த ...
திடீரென மயங்கி வீழ்ந்து யாழில் ஒருவர் உயிரிழப்பு!
Posted by Vimal on Januar 11th, 2021 04:12 PM | No Comment
உணவருந்திய பின்னர் கை கழுச் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.நல்லூர், அரசடியைச் சேர்ந்த அ.கிரிதரன் (வயது-54) என்வரே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வழமை போன்று இரவு உணவு அருந்திவிட்டுக் கை கழுவச் சென்றுள்ளார். அப்போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயணின்றி உயிரிழந்தார்.இறப்பு விசாரணைகளை யாழப்பாணம் போதனா ...
சுழல் காற்ரினால் கல்லுண்டாயில் 9பது வீடுகள் சேதம்!
Posted by Vimal on Januar 6th, 2021 07:59 PM | No Comment
யாழ்ப்பாணம் – கல்லுண்டாயில் இன்று (6) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே/136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவிலேயே சுழல் காற்று வீசியுள்ளது. இதன்போது 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட ...
பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கி வைப்பு
Posted by Vimal on Dezember 20th, 2020 12:01 AM | No Comment
யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஜே/257 கிராம வேவையாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு கல்வியங்காடு நல்லூர் நண்பர்கள் (UK- EUROPE) நிதிப்பங்களிப்பில் இருபாலை தெற்கு மாதர் அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று (19) காலை நடைபெற்றது.தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றை அடுத்து தொடர் மழை வெள்ளம் காரணமாக அன்றாடம் ...
பல பகுதிகள் யாழ் மாவட்டத்தில் பேய் மழை மூழ்குகின்றன
Posted by Vimal on Dezember 6th, 2020 08:54 PM | No Comment
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (06) பிற்பகல் முதல் கொட்டித் தீர்க்கும் கடும் பல கிராமங்கள் முன்னர் இருந்ததை விட அதிகமான வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன.இதன்படி யாழ்ப்பாணம் நகர், வலிகாமம், தென்மராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 8 மணிவரையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் ...
வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்தவர் கொடிகாமத்தில் மரணம்
Posted by Vimal on Dezember 3rd, 2020 06:43 PM | No Comment
தென்மராட்சி – கொடிகாமம் மத்தி பகுதியில் இன்று (03) காலை நபர் ஒருவர் வீதியில் வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.காலை 8 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் நாவலடி வைத்தியசாலையில் ...