சந்திரனில், 280 எரிமலைகள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
Posted by Vimal on Juni 19th, 2013 10:32 AM | No Comment
சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி ...
கோப்பி செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்
Posted by Vimal on Juni 8th, 2013 11:53 PM | No Comment
வீட்டை சுத்தம் செய்ய எலுமிச்சை, சர்க்கரை, உப்பு, வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவைத் தான் பயன்படுத்துவோம். இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க கோப்பியும் உதவியாக உள்ளது.என்ன ...
அழிந்து போனதாக கருதப்படும்”மம்மூட்”திரவ இரத்தம் கண்டுபிடிப்பு
Posted by Vimal on Mai 31st, 2013 06:38 PM | No Comment
ரஷ்யா நாட்டில் அழிந்து போனதாக கருதப்படும் "மம்மூட்" எனப்படும் யானையின் உடலை திரவமான இரத்தத்துடன் கண்டுபிடித்துள்ளார்கள்!
எத்தனையோ ஆண்டுகளாக குளோன்(போலிகை)-Clone விஞ்ஞானிகள் "மம்மூட்" இனத்தை உயிர்வாழவைத்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
திரவமான இரத்தத்தையும், தசையையும் கொண்ட "மம்மூட்" யானையின் உடலை கண்டுபிடித்தது ரஷ்ய ஆய்வாளர்களுக்கு, அழிந்து போனதாக கருதப்படும் யானை இனத்தை என்றோ ...
அணுவினுள் படமெடுத்து புரட்சி!
Posted by Vimal on Mai 30th, 2013 06:25 PM | No Comment
இவ் உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை.அணுக்களைப் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே அணுவை வெற்றிகரமாக பிரித்ததுடன் அணுப் பெளதிகவியலின் தந்தையாக கருதப்படுகின்றார். இவரை இரண்டாம் நியூட்டன் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் ...
கடல் நீரில் இருந்து யுரேனியம் எடுக்கலாம்
Posted by Vimal on Mai 22nd, 2013 11:53 AM | No Comment
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும்' என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அணு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களில் யுரேனியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. யுரேனியம் தாது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. அவை கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ...
எழுதும் போதே எழுத்துப் பிழைகளை இனங்காணும் நவீன பேனை
Posted by Vimal on Mai 14th, 2013 01:39 PM | No Comment
கணனியில் தட்டச்சு செய்யும் போது எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதில்லை, ஆனால் பேனையால் எழுத முற்படும் போது இத்தகைய பிழைகள் வருவது இயற்கையே.. அதையும் முழுமையாக குறைக்க ஒரு இலத்திரனியல் பேனை உருவாக்கப் பட்டுள்ளது. Lernstift என்ற ஜெர்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட இப்பேனை ஒவ்வொரு பிழைகளுக்கும் சிறு அதிர்வுகளை ஏற்படுத்த ...
கியூரியோசிட்டியின் வேலைகள் மீண்டும் ஆரம்பம்!
Posted by Vimal on Mai 12th, 2013 09:45 PM | No Comment
நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ...
அருந்தும்போதே நீரை வடிகட்டும் கருவி அறிமுகம்
Posted by Vimal on Mai 7th, 2013 12:13 PM | No Comment
உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானதாக காணப்படும் நீரில் உள்ள மாசுக்களால் பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயங்கள் அதிகம் உள்ளன.இதற்காக நீரை வடிகட்டி அருந்தும் பழக்கம் தற்கால மக்களிடையே விரைவாகப் பரவி வருவதுடன் இதற்கென பல்வேறு கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக NDūR Survival Straw எனும் நவீன கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஏனைய வடிகட்டும் கருவிகளைப் போன்று அல்லாமல் ...
படித்ததில் பிடித்தது-:நம்மால் முடியும்…!
Posted by Vimal on Mai 3rd, 2013 08:25 PM | No Comment
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு " ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ...
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு
Posted by Vimal on April 4th, 2013 12:51 AM | No Comment
செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி ஆராய்ந்து வருகிறது. இந்த விண்கலமானது, முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை கண்டுபிடித்துள்ளது. இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும் போது, இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறுகிறது. அப்போது ...













