குழந்தையைப் பணயம் வைத்து அல்வாயில் துணிகரக் கொள்ளை
Posted by Vimal on Juni 18th, 2013 06:56 AM | No Comment
குழந்தையையும் மனைவியையும் பணயமாக வைத்து வீடு ஒன்றில் தங்க நகையையும் பணத்தையும் கொள்ளையிட்டனர் மூன்று கொள்ளையர்கள். இந்த துணிகரச் சம்பவம் அல்வாய் கிழக்கு இலகடியில் நேற்று அதிகாலை 12.15 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் தெரு ...
ஏழாலை-இளம் பெண்ணை தாக்கி தங்க நகைகள் அபகரிப்பு
Posted by Vimal on Juni 16th, 2013 06:32 PM | No Comment
அயல் வீட்டுப் பெண் பொல்லினால் தாக்கியதால் மயக்கமடைந்த இளம் பெண்ணிடம் இருந்த நிலையில் சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்ட சம்பவம் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏழாலைப் பகுதியில் தனது வீட்டுக்கு அயலில் உள்ள வீட்டில் இந்தத் துணிகரத் திருட்டை மேற்கொண்டுள்ளார். வீட்டில் தனது மகளைச் சமைக்கும்படி கூறிவிட்டு தாயார் தெல்லிப்பழை ஆதார ...
கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருட்டு
Posted by Vimal on Juni 10th, 2013 07:50 AM | No Comment
ஆலய முன்றலில் பாதுகாப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பல வந்த மாக உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய உண்டியல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இனந்தெரியாதோ ரால் உடைக்கப்பட்டுள்ளன.
ஆலய முன்றலில் பாது காப்பு மிக்க இரும்பிலான உண்டியல் பலவந்தமாக உடைக்கப்பட்டு அதனுள் ளிருந்த பணம் திருடப் பட்டுள்ளது. ...
நாகர்கோவில் மக்களின் இதயவலிகள் என்னும் 10 நிமிட காணொளி
Posted by Vimal on Juni 7th, 2013 03:54 PM | No Comment
நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த மாணவி அருணாசலம் மேரிதர்சிகா அவர்கள் திருகோணமலை பல்கலைக்கழகத்தில் படிப்பினைமேற்கொண்டு நிறைவுக்கு வந்தவேளை எமதுகிராமத்தின் நிஜங்களை பார்வையிட்டு படமாக்கி அதனை பத்துநிமிடமாக சுருக்கி உள்கருத்துக்களை உலகமெங்கும் பரவிவாழும் நாகர்கோவில் கிராமமக்களுக்கு தெரிவிப்பதுடன் இக்கிராம மக்களுக்கு தற்போது அவசியமானது என்னவென்று எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வீடியோவினை பார்த்தவர்கள் அதனை அறிந்துகொண்டு எமதுகிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தினை வழங்குவீர்கள என எதிர்பார்க்கின்றோம்.நாகர்கோவில் ...
யாழ். மணியந்தோட்டப் பகுதியில் திருச்சொரூபம் உடைத்தழிப்பு
Posted by Vimal on Juni 7th, 2013 06:32 AM | No Comment
யாழ். மணியந்தோட்டம் ஐந்தாம் ஒழுங்கைப் பகுதியில் பொது மக்களால் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த திருஇருதய ஆண்டவரின் திருச்சொரூபம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டப் பகுதியில் கத்தோலிக்க மக்களால் வழிபாட்டிற்கென அமைக்கப்பட்டிருந்த திருச்சொரூபமே நேற்று முன்தினமிரவு சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வழிபாட்டுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்களால் பங்குத்தந்தையிடமும் கிராமசேவையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது. குறித்த திருச்சொரூபத்தினை ...
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராய்
Posted by Vimal on Juni 4th, 2013 07:27 PM | No Comment
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உரும்பிராய் மேற்குப் பகுதியைச் சேர்ந்த காந்தன் சாளினி என்ற சிறுமியே உயிரிழந்தவராவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று செவ்வாய்கிழமை மாலை வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தவேளை குறித்த சிறுமியின் கயிறு கழுத்தில் ...
30 வருட கால யுத்த சூழலில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறவில்லை
Posted by Vimal on Juni 3rd, 2013 10:32 PM | No Comment
மட்டக்களப்பு மாவட்ட, குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காமர் ஆலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம், விக்கிரகம் மற்றும் ஆலய சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் மாங்காடு பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரக திருட்டு மற்றும் கிரான்குளம் ஐயனார் ஆலய உண்டியல் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச ...
ஒரே இரவில் 4 இந்துக் கோயில்கள் விசமிகளால் உடைப்பு
Posted by Vimal on Juni 3rd, 2013 07:11 AM | No Comment
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தச் சம்பவங்களால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி ...
எதிர்ப்புக்களையும் மீறி கவுணாவத்தையில் மிருகபலி
Posted by Vimal on Juni 1st, 2013 10:05 PM | No Comment
கீரிமலை சருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இன்று அதிகாலை முதல் சுமார் எழுநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டன.அதிகாலையில் இடம் பெற்ற பூசை வழிபாடுகளை தொடர்ந்து வைரவருக்கு பொங்கி படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வெளி மண்டபத்தில் மாமிசப்படையல் செய்யப்பட்டது. இதில் முட்டைகள், கள்ளு,கருப்பணி போன்றவற்றுடன் உணவு படைக்கப்பட்டு கடா வெட்டப்பட்டு தலையும் படைக்கப்பட்டது.
தொடாந்து ஏனைய கடாக்கள் ...
கவுணாவத்தை வேள்வியை நிறுத்த கோரி முறைப்பாடு
Posted by Vimal on Mai 31st, 2013 09:25 AM | No Comment
தெல்லிப்பழை கவுணாவத்தை நரசிம்மர் ஆலயத்தில் நடைபெறும் வேள்வியை தடுத்து நிறுத்தக் கோரி தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியினால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பலஆண்டுகளாக கவுணாவத்தை நரசிம்மர் ஆலயத்தில் மிருக பலியிடும் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது. இதனை பல ஆயிரக் கண்க்கான பொது மக்கள் கலந்து கொள்வதும் சுட்டிக் காட்டக்கூடியதாகும். ஏற்கனவே ...













