இத்தாலி அனுப்புவதாகக் கூறி பணமோசடி சுழிபுரம்
Posted by Vimal on Februar 23rd, 2013 09:50 AM | No Comment
இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ். சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம்50 இலட்சம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளது.அம்மோசடி தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இத்தாலி நாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ...
கடலுக்குள் பாய்ந்து பேருந்து யாழில் சம்பவம்
Posted by Vimal on Februar 12th, 2013 03:55 PM | No Comment
யாழ்ப்பாணத்தில் இருந்து ஊறுகாவற்றுறைக்கு சென்றுக்கொண்டிருந்த பேருந்து பண்ணை கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுருக்கிட்டு தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு
Posted by Vimal on Januar 18th, 2013 11:01 AM | Kommentare deaktiviert
திருநெல்வேலி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் அவரது வீட்டிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி காலாசாலை வீதியை சேர்ந்த 19 வயதுடைய சோமசுந்தரம் தர்மிளா என்பவரே இவ்வாறு சுருக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது வீட்டிலுள்ளோர் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது தனியே இருந்த குறித்த ...
செப்டம்பர் முதல் யாழ்தேவி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு
Posted by Vimal on Januar 17th, 2013 04:42 PM | Kommentare deaktiviert
கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்தேவி புகையிரதச் சேவையானது, இந்த வருடம் செப்டம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள துணைத்தூதரகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப் பாதை அமைக்கும் பணிகளை இந்தியாவின் “இர்க்கோன்” என்ற நிறுவனமே தற்போது மேற்கொண்டு வருகின்றது.
காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான ...
வீரத்துறவி என்றழைக்கப்படுபவர் விவேகானந்தர் மட்டுமே
Posted by Vimal on Januar 13th, 2013 11:15 AM | Kommentare deaktiviert
“இளைஞர்களே, எழுந்துநில்லுங்கள். தோல்வியில் துவண்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை பலமான கரங்களால் மாற்றியமைப்போம். பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும். ...
விவேகானந்தரின் 150 வது நினைவு நிகழ்வு:வவுனியா
Posted by Vimal on Januar 12th, 2013 11:36 AM | Kommentare deaktiviert
வவுனியா இந்து ஆலயங்களின் ஏற்பாட்டில் விவேகானந்தரின் 150 வது நினைவு நாள் நிகழ்வுகள் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இன்று காலை 9மணிக்கு நடைபெற்றது. முன்னதாக விவேகானந்தரின் திருவுருவப்படம் தாங்கியவாறு குடியிருப்பு விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் நகரின் வழியாக வந்து, சுத்தானந்த மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலையை அடைந்நது.அங்கு அவரின் சிலைக்கு மாலை ...
பிள்ளையை அணைத்தபடி குளத்தில் தாய் தற்கொலை
Posted by Vimal on Januar 6th, 2013 11:04 AM | Kommentare deaktiviert
கிளிநொச்சி பகுதியில் தாய் ஒருவர் தனது 5 வயதுடைய ஆண் பிள்ளையுடன் குளத்தில் குதித்து மரணமடைந்துள்ளார்.குஞ்சுப்பரந்தன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சுகுமார் நிசாந்தினி என்ற பெண்ணே தனது பிள்ளையை அணைத்தபடி வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிரிழந்துள்ளார்.குறித்த இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சகோதர இணையத்தின் தார்மீக சேவை வாழ்த்துக்கள்
Posted by Vimal on Januar 4th, 2013 09:31 AM | Kommentare deaktiviert
தாவடி இணையத்தின் தார்மீக சேவை தாவடி இணைய இயக்குனர் அண்மையில் தாயகம் சென்றிருந்த வேளை பல சேவைகள் நம் உடன்பிறப்புகளுக்கு செய்தது நாம் அறிவோம். ஆனாலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு 90 ஆயிரம் ரூபா தனது நண்பர்களுடன் இணைந்து வழங்கியது என்பது உண்மையில் நாம் பாராட்ட வேண்டிய விடையம். இவர்போன்ற தன்னலமற்ற சேவைகள செய்வோரை வாழ்த்துவது எம் எல்லோர் கடமையாகும்.சிறுப்பிட்டி இணையமும் ...
இன்று 21ம் திகதி உலக அழிவு: யாழ் இளைஞர்கள் உருவாக்கிய பாடல்!
Posted by Nemi on Dezember 21st, 2012 06:51 AM | Kommentare deaktiviert
மாயன் காலண்டர் முடிவுக்கு வருவதையொட்டி வருகிற 21-ந் திகதி உலகம் அழிந்து விடும் என்ற பீதி உலக அளவில் பரவியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் பல பாகங்களில் அடைமழை, மீன்மழை, செம்மழை, முதலை மழை, இறால் மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என இயற்கை அழிவுகள் ஏற்படுவதனால் மக்கள் மத்தியில் உலக அழிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இவை இருக்கலாமோ ...
இடைக்காடு இளைஞனின் கொலை: ஐவருக்கு 36 வருடம் கடூழியச்சிறை
Posted by Nemi on Dezember 6th, 2012 09:29 AM | Kommentare deaktiviert
யாழ். அச்சுவேலி, இடைக் காட்டில் தர்மராசா சிவானந்தனின் இறப்புக்குக் காரணமாக இருந்த மூவருக்கு 36 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் திறந்த நீதிமன்றில் ஜூரி சபையினர் முன்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது. நேற்று ஜூரி சபையினர் வழக்குத் தொடர்பான ...













