கட்டிட இடிபாடுகளுக்குள் ஒரு மாதங்களின்பின் உயிருடன் ஒருவர்
Posted by Vimal on September 4th, 2020 05:17 PM | No Comment
பெய்ரூட் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து 30 நாட்கள் கடந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் மீட்புப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.சிலி மீட்புக் குழுவான டோபோஸுடன் பணிபுரியும் ஒரு துப்பரியும் நாய் இடிபாடுகளுக்கு வெளியே இருந்தபடி ஒருவர் உயிருடன் இருப்பதற்கான சமிக்ஞையை வழங்கியதையடுத்து, மீட்பு முயற்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து நாட்களாக மீட்பு ...
விண்கல்லினால் ஏழை விவசாயிக்கு அடித்த பேரதிஸ்டம்
Posted by Vimal on September 4th, 2020 04:21 PM | No Comment
விண்வெளியிலிருந்து பூமிக்குள் விழும் விண்கற்களுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. சில நாடுகளில் விண்கற்களின் வகைக்கு ஏற்றார் போல பணம் வழங்கப்படுகிறது. அப்படி வடகிழக்கு பிரேசிலின் தொலைதூர நகரமான சாண்டா ஃபிலோமினாவில் வசிக்கும் விவசாயிக்கு கிடைத்த அரிய வகை விண்கற்களிற்கு சுமார் 26,000 டாலர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் பணக்காரர் ஆகிவிட்டார்.விண்கல்லிற்கு இவ்வளவு பெரிய ...
அம்பாறையில் கடற்பிராந்தியத்தில் தீப்பற்றி யெரியும் கப்பல்
Posted by Vimal on September 3rd, 2020 04:03 PM | No Comment
அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் ...
யாழ் கொக்குவிலில் போதைப்பொருட்களுடன் மாட்டிய ஐவர்
Posted by Vimal on September 3rd, 2020 03:33 PM | No Comment
யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்குப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்துகொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.இதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருன் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் 248 ...
வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் மரணம்
Posted by Vimal on September 2nd, 2020 11:45 AM | No Comment
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் கடந்த தினங்களில் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.கடந்த திங்கட்கிழமையன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று பேர் ...
லொறியொன்றும் முச்சக்கரவண்டிகள் விபத்தில் இருவர் சாவு
Posted by Vimal on September 2nd, 2020 11:15 AM | No Comment
கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.லொறியொன்றும் முச்சக்கரவண்டிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்விபத்தையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
செல்வச் சந்நிதியில் திரண்ட அடியவர்கள் முருகன் முத்தேர் பவனி
Posted by Vimal on September 1st, 2020 05:47 PM | No Comment
யாழ், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது.வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால் போற்றிச் சிறப்பிக்கப்படுவதுமான செல்வச் சந்நிதியானின் மகோற்சவம் ஓகஸ்ட் 19ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் இன்று ...