நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
Posted by Vimal on Januar 22nd, 2021 03:32 PM | No Comment
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயபூசகர் மற்றும் நிர்வாகத்தினரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.ஒலுமடு ஆதிசிவன் ஆலயப்பகுதியில் உள்ள தொல்லியல் பகுதிகளை சேதப்படுத்தியமை காடுகளை அழித்தனர் என நெடுங்கேணி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அடகு நிறுவனத்தில் ரூ7 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!
Posted by Vimal on Januar 22nd, 2021 03:18 PM | No Comment
முத்தூட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த ரூ7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பத்து தனிப்படைகள் அமைத்துள்ளது காவல்துறை.ஓசூரில் உள்ள முத்தூட் என்ற தனியார் நகை அடகு வைக்கும் அலுவலகத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் ...
மெல்பேர்ன் நகரில் தடுப்பிலிருந்து விடுவிக்கப்படும் அகதிகள்
Posted by Vimal on Januar 21st, 2021 11:14 AM | No Comment
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 60 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.இதையடுத்து, இன்று மெல்பேர்ன் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 26 அகதிகளுக்கு ஆறு மாத இணைப்பு விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்படுள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் 34 பேர் நாளை ...
காதலியை கொடூரமாக குளியலறையில் கொலை செய்த காதலன்
Posted by Vimal on Januar 18th, 2021 10:06 PM | No Comment
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றுவிட்டார்.அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறாயே என்று இளம்பெண் ...
கொடூரமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்
Posted by Vimal on Januar 18th, 2021 09:52 PM | No Comment
கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் கணவனால் மனைவி வெட்டி படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்டு முரண்பாடு முற்றிய நிலையில்மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டி படுகொலை செய்துள்ளார்என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் மூன்றுபிள்ளைகளின் தாய் ஆவார். இச்சம்பவம் நேற்றுப் (17) பிற்பகல் இரண்டுமணியளவில் இடம்பெற்றுள்ளது.தெளிகரை பகுதியைச் சேர்ந்த டேவிட் ரூபன் கீதா ...
வீடொன்றில் பூநகரியில் பெண்ணொருவர் கொலை!
Posted by Vimal on Januar 17th, 2021 06:35 PM | No Comment
கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 30 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் விபத்து ஒருவர் பலி
Posted by Vimal on Januar 17th, 2021 06:10 PM | No Comment
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு 11.45 மணி அளவில் பரந்தன் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே ...
சத்து நிறைந்த காய்கறி களை உண்பதால் உள்ள நன்மை
Posted by Vimal on Januar 16th, 2021 04:28 PM | No Comment
காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமசத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம்.இந்த வகை ...
அடைமழையினால் கிளிநொச்சியில் வெள்ளச்சேதம்!
Posted by Vimal on Januar 15th, 2021 07:52 PM | No Comment
தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது..
அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகளவான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட ...