அகால மரணம் அமரர் சின்னராஜா வித்தகன் 08-04-21
Posted by Vimal on April 9th, 2021 04:07 PM | No Comment
பிறப்பு-11-09-2002--இறப்பு--08-04-2021.யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவந்த திரு தம்பு சின்னராஜா (அப்பன்) நந்தினிதம்பதிகளின் மூன்றாவது மகன் (பிறப்பிடம் கொழும்பு ) வித்தகன் அவர்கள்08-04-2021 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு பறுபதம் தம்பதிகனதும் மற்றும்காலிங்கராஜாதம்பதிகளின் அன்புப் பேரனும் சுருதி சங்கீர்த்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார்அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம்.11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று(கொழும்பு ...
அதிரடி தீர்மானம் இலங்கை மின்சார ஊழியர்களின் !!!
Posted by Vimal on April 8th, 2021 10:14 AM | No Comment
பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (08) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.சுமார் 25 ஆயிரம் மின்சார ஊழியர்கள் கொழும்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் ...
இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்!
Posted by Vimal on April 8th, 2021 09:54 AM | No Comment
136 மில்லியன் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து ...
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல்
Posted by Vimal on April 6th, 2021 06:31 PM | No Comment
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும் அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கு நட்டஈடு பெற்று தருமாறு கூறி தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த மனுவின் பிரதிவாதிகளாக ...
பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவி மரணம்
Posted by Vimal on April 6th, 2021 06:06 PM | No Comment
பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம், புத்தளம்- வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி ...
இன்னும் இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் காரணிகள்
Posted by Vimal on April 5th, 2021 07:35 PM | No Comment
இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் காரணிகளை கொண்ட தேங்காய் எண்ணெயை இன்னும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் களஞ்சியசாலையில் வைத்திருப்பது பிரச்சினைக்குரிய விடயம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இதனைக் கூறியுள்ளார்.
தற்போதுள்ள முறையை மாற்ற, அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தால் இதுவரை ...
யாழில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Posted by Vimal on April 4th, 2021 06:46 PM | No Comment
யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.குடத்தனை தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை என்று தெரியவருகிறது.மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
தலவாக்கலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்து ஒருவர் பலி
Posted by Vimal on April 4th, 2021 06:20 PM | No Comment
தலவாக்கலை, அக்கரப்பத்தனை, ஹோல்புரூக் பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 43 வயதுடைய ரவிகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.வீடொன்றுக்காக நிர்மாண வேலைகளை ஈடுபட்டிருந்தபோதே இவ்வாறு அவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பணம் மற்றும் நகைகள் கத்திமுனையில் கொள்ளை!!!
Posted by Vimal on April 3rd, 2021 07:05 PM | No Comment
யாழ்.நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்படப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றதுவீட்டில் முதியவர் ஒருவர் தனித்திருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அவரை கத்தி முனையில் அச்சுறுத்தி சுமார் 9 பவுண் நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுள்ளது.வீட்டின் சமையலறை யன்னலை பிரித்து ...
தொழில்நுட்ப உபகரணங்களுடன் இருவர் கைது!!!
Posted by Vimal on April 3rd, 2021 06:36 PM | No Comment
இந்த நிலையில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் ...