ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் அருகே சதாசிவகோனை அருவி உள்ளது. இதன் அருகே உள்ள சதாசிவேஸ்ரசாமி கோவில் உள்ளது. 
ஆண்டு தோறும் இக் கோவிலில் மகாசிவராத்திரி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதே போல் நேற்றும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

அப்போது சென்னை தி.நகரை சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு உதயகுமார் சாமி தரிசனம் செய்தார். அவர் கோவிலுக்குள் படிக்கட்டு வழியாக ஏறி சென்ற போது கூட்ட நெரிசலில் கீழே தவறி விழுந்தார்.

அப்போது கீழ் பகுதியில் இருந்த திரிசூலம் அவர் மீது பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடிக்க இறந்து போனார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பக்தர் திரிசூலம் பாய்ந்து இறந்ததால் கோவில் மாலை 4.30 மணிக்கு மூடப்பட்டது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கோவில் நிர்வாகிகள் விரைவில் பரிகார பூஜை நடத்த திட்மிட்டுள்ளனர்.