சாய்பாபாவின் தீவிர பக்தர்ரான நடிகை ஜமுனா, புட்டபர்த்தி ஆசிரமம் சென்று சாய்பாபா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சாய்பாபாவின் கோடிக்கணக்கான பக்தர்களில் நானும் ஒருவர். அவரிடம் சென்று எனது எந்த கஷ்ட நஷ்டங்களை கூறினாலும் தீர்த்து வைப்பார். அவர் ஒருபோதும் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு பார்த்ததில்லை. அனைவருடனும் சமமாக பழகினார்.

அவர் தொடங்கிய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை கிடையாது. அனைவரும் சமம் என்பதை வெளிப்படுத்துவதற்காக இந்த முறையை கொண்டு வந்தார்.
 
அவரது அருளால் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் பாபா என்றார்