நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்நாட்களில் அடிக்கடி மழை பெய்துவருவதன் காரணமாக டெங்கு நோய் பரவுவது அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் எனவே மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இடைக்கால பருவப்பெயர்ச்சியின் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் சில தினங்களுக்கு அடிக்கடி மழை பெய்யும் நிலைமை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மழைக் காலங்களில் டெங்கு நோயை ஏற்படுத்தும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்றும் எனவே மக்கள் தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் இதுவரை 3784 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.