இந்தோனேஷியாவில் சுலாவேஷி தீவு உள்ளது. அப்பகுதியின் தலைநகரமாக ஜெகந்தாரி விளங்குகிறது. சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் இங்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.   அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமி அதிர்ந்தது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
 
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஜெகந்தாரியின் தென் கிழக்கு பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்தன. அதனால் மக்கள் கடும் பீதிக்குள்ளானார்கள்.
 
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படுமோ? என மக்கள் அச்சம் அடைந்தனர்.   ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
 
6.2 ரிக்டர் ஸ்கேல் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.