ஈக்குவடோரின் துங்குராகுவா எரிமலை புகையையும், சாம்பலையும் வெளிப்படுத்த ஆரம்பித்ததைத் தொடர்ந்து அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலையிலிருந்து வெளிப்படும் புகை 7 கிலோ மீற்றர் உயரம் வரைக்கும் பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிமலையை அண்மித்து வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறும் அப்பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துங்குராகுவா எரிமலை கடந்த 12 ஆண்டுகளாக காலத்துக்குக் காலம் குமுறுவது வழக்கமாகும். இவ்வருடத்தில் குமுறுவது இதுவே முதல் முறையாகும்.

ஈக்குவடோரின் பௌதீகவியல் மையம் இது குறித்து தெரிவிக்கையில், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.