களிமண், சீமெந்து, பனிக்கட்டி போன்றவற்றால் உருவங்கள் செதுக்குவது பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். அதனைக் கண்டும் உள்ளோம். ஏன் பாடசாலைப் பருவத்தில் கிளேயால் கூட உருவங்கள் செய்து விளையாடியிருக்கிறோம். ஆனால் பொலித்தீனாலான உருவங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த உருவங்கள் இழுபடக்கூடிய பொலித்தீன்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொலித்தீன் உருவங்கள் பெருமளவில் போட்டிக்கு விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.