பலாங்கொடை மாராத்தென்ன தோட்டப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி ஒன்றிறை வன ஜீவராசிகள் பிரிவினரும் பொலிஸாரும்; இணைந்து நேற்று பிற்பகல் வேளையில் பிடித்துள்ளனர்.

மாராத்தென்ன தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கிடையில் ஒரு வித சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அங்கு ஆராய்ந்து பார்த்த போது மஞ்சள் நிறத்துடன் கூடிய விசாலமான புலி ஒன்றிருப்பதைக் கண்டுள்ளனர்.

இந்தப்புலிக் குறித்து தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரின் ஊடாக மாராத்தென்ன பொலிஸாருக்கும் வன ஜீவராசிகள் பிரிவினக்கும் அறிவித்தனர். அந்தப்பகுதிக்கு வருகைத்தந்த பொலிஸாரும் வன ஜீவராசிகள் பிரிவினரும் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு புலியைப் பிடித்துள்ளனர்.