ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரம் ராஞ்சியில் மாணவர் ஒருவர் மாணவியின் தலையை வெட்டி எடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சயிண்ட் சேவியர் காலேஜ் மாணவி குஷ்புகுமாரி ராஞ்சியில் உள்ள ஹச்யா இடத்தில் ரவீந்திரநாத் தாகூர் இண்டர் காலேஜில் நேற்று தேர்வு எழுத வந்தார்.

நேற்று மாலையில் குஷ்புகுமாரிக்கும் என்ஜினியரிங் மாணவர் விஜேந்திரகுமார் வாக்குவாதம் நடந்துள்ளது.

இதன்பின்னர் ஆத்திரம் அடைந்த விஜேந்திரகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொடூரமான முறையில் குஷ்புகுமாரியின் தலையை வெட்டி எடுத்தார்.

இதையடுத்து கல்லூரியின் பிரின்சிபல் பாதர் நிக்கோலஸ் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் விஜேந்திரகுமாரின் கொலைவெறிக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.