யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தோட்டங்களில் வைக்கப்பட்ட மரக்கறி வகைகள் அழுகிப் போவதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

தொடர்ந்து பெய்யும் மழையினால் எமது மரக்கறிக் கன்றுகள் அழியும் நிலமையை எதிர் நோக்கியுள்ளோம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியிலும் யாழ்ப்பாணத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மரக்கறி வகைகள் அழுகியது. இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் நோக்கி இருந்தனர்.

தென்பகுதியில் மரக்கறிச் செய்கையாளர்கள் பயிர்களுக்கு காப்புறுதி செய்வதனால் இத்தகைய இயற்கை அழிவுகளின்போது நஷ்ட ஈட்டினை பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வட பகுதி செய்கையாளர்கள் காப்புறுதி விடயத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதனால் இத்தகைய அழிவுகளின்போது எந்த வகையான நஷ்ட ஈடுகளும் கிடைக்கப்பெறாமல் நஷ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.