அலபாமாவில் வீசிய கடும் புயல் காரணமாக இதுவரை குறைந்தது 300 பொதுமக்கள் வரை பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் ஜக்கிய அமெரிக்காவில் குறைந்தது 300 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அலபாமாவில் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் நிவாரண உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து புதன்கிழமை ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார ஆரம்பத்தில் அமெரிக்காவின் தென்பகுதியில் 11 பேர் வரை புயல் காரணமாகக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.