இவ்வருடத்தின் மிகவும் எதிர்ப்படும் நிகழ்வான இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டனின் திருமணம் இன்று லண்டனில் நடைபெறவுள்ளது.

இத்திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 1,900 பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியம் கல்லூரியில் படித்தபோது அதே கல்லூரியில் படித்த கேட் மிடில்டனை காதலித்தார். இவர்கள் ஒருவரை ஒருவர் நீண்டகாலமாக காதலித்து வந்தனர்.

இவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டு பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 11 மணிக்கு திருமணம் ஆரம்பமாகவுள்ளது. திருமண நிகழ்ச்சி இங்கிலாந்து நேரப்படி காலை 8.15 மணிக்கு தொடங்குகிறது

உலகம் பூராகவும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ள இத் திருமண நிகழ்ச்சியை சுமார் 200 கோடி பேர் பார்த்து இரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை திருமண நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறாமல் தடுக்க அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Free Videos by Ustream.TV