யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்குழு வீட்டு உரிமையாளரைத் தாக்கிவிட்டு பல இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது கந்தப்பு செல்வகுமார் (46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

கழுத்து மற்றும் மார்புப்பகுதிகளில் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சுன்னாகம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நபரது மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.