யாழ். குடாநாட்டில் தொடரும் சீரற்ற மின்சாரத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் விளக்குகளுக்கு நாட்டம் காட்டியுள்ளனர்.

வீதி அகலிப்பு பணிப்பாக வீதியோரம் உள்ள மின்கம்பங்கள் பின்தள்ளி நடப்பட்டு வருவதாலும் திருத்தப் பணிகளுக்காகவும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. இதனால் குடாநாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் இடம்பெறும் சீரற்ற மின்சாரத்தால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டுக்காகக் குப்பி விளக்குகளை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் என்பன ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தச் செயற்பாட்டால் மணவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்கள் இரவில் தமது பரீட்சைக்குத் தயாராவதற்கான கற்றல் செயற்பாடுகளை இந்த சீரற்ற மின்சார விநியோகத்தால் மேற்கொள்ள முடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குடாநாட்டு மாணவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சீரற்ற மின்சாரத்தாலும் இரவு வேளையில் திடீரென துண்டிக்கப்படுவதாலும் பரீட்சைக்கான கற்றல் நடவடிக்கை பாதிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்

Related Posts Plugin for WordPress, Blogger...