ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழிப்ப யிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.

 இந்த கருத்தரங்கில் கோட்டாட்சியர்  கணேஷ் பேசியதாவது, நல்ல தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும். நம்நாட்டில், உச்சநீதிமன்றம் தவிர  அனைத்து இடங்களிலும் தமிழில் எழுதலாம், உயர்நீதிமன்றத்தில் கூட நீங்கள் தமிழை முழுமையாக பயன்படுத்தலாம்.  

அரசாணைகள், அரசுத்துறை தொடர்பான பதில்கள் போன்ற அனைத்தையும் முழுமையாக தமிழில் வெளியிட வேண்டும். கிராமப்புறத்தில்

உள்ளவர்களுக்கு கூட,  அரசு அலுவலகத்தில் இருந்து வந்துள்ள பதில் என்ன என்பதை புரியும் வகையில், முழுமையான தமிழில் எழுத

வேண்டும்.   வேறு மொழியில் எழுதுவது,  அவர்களுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி விடக்கூடாது‘’ என்று அவர் பேசினார். கரூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ராஜன் பேசியபோர்ஹு,  ‘’தமிழகத்தில் சோழர் காலத்தில் தான்  நீதி இலக்கியம்,  நீதிநெறி, சமயம்,  ஆன்மிக கருத்துக்கள் அதிகம் வரத்து வங்கியது.

  சோழர் காலத்துக்குப்பின், பல மொழிகளில் கலப்பால், தமிழ் மொழியின் நடை மாறியது, அதன்பின்னர்  மணிப்பிரவாள நடை உருவானது.

 

இந்தியாவிலுள்ள பல மொழிகள் பிற மொழிக்கலப்பால் அழிந்து வரும் நிலையில்,  தமிழ் மொழி மட்டுமே இன்னும் நிலைத்து நிற்கிறது.

 

காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை ஏற்றுகொண்டு தமிழ் மொழி நிலைத்து நிற்ப்பதுடன் வளர்ந்துவருகிறது. மணிப்பிரவாள நடை முதல்,  இன்று கணினித்தமிழ் வரை தமிழ்மொழி உயர்ந்து நிற்கிறது.

  அப்படியிருந்தும், நம் இளைஞர்கள்  இணைய தளத்தில் தமிழை சரியாக பயன்படுத்துவதில்லை. இணையத்திலும் பேச்சு வழக்கிலும் தமிழை  அதிகம் பயன்படுத்தி வருபவர்கள் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள்தான்.

  தமிழகத்தில் உள்ள பல இலக்கியங்களைக்கூட, அவர்கள் இணையத்தில்  பதிவேற்றம் செய்து வைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாம் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியும் செய்து வைத் துள்ளனர். அதை நம்முடைய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண் டும்.

நாம், நல்ல தமிழில் பேசி, எழுத வேண்டும். அரசு கோப்பு,  ஆவணங்களை தமிழில் ஆவணப் படுத்துங்கள். மொழி இனத்தின் அடையாளம் என்று அவர் பேசினார்.

  நிறைவாக தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் செந்தூர்மருது பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்’’என்று  பங்கேற்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...