யாழ். நகர்பகுதியில் வீதிஒழுங்கை மீறி தரித்து நிறுத்தப்பட்ட வாகனங்களை யாழ்,போக்குவரத்து காவற்துறையினர் அப்புறப்படுத்தி சென்றனர்.
இதன்படி,யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்பாக. மஞ்சட்கோட்டிற்கு மேலே விதியைமீறி நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை இவ்வாறு போக்குவரத்து காவற்துறையினர் வாகனங்களில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
மேலும், காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வாகன உரிமையாளர்களிற்கும், போக்குவரத்து காவற்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
எனினும் போக்குவரத்து காவற்துறையினர் வழக்கை பதிவு செய்ததுள்ளனர்.













