ஸ்ரீ சத்திய சாயி பாவாவின் படத்திலிருந்து விபூதி சொரிகின்ற அற்புதம் மட்டக்களப்பு மாவட்டம், காரைதீவில் இடம்பெற்று வருகிறது.விஷ்ணு வித்தியாலய வீதி காரைதீவு-07 ஜச் சேர்ந்த பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாவாவின் பக்தர்களான திரு.திருமதி. குணசேகரம் – சாந்தி என்பவர்களது வீட்டிலுள்ள ஸ்ரீ சத்திய சாயி பாவாவின் திருவுருவப்படத்திலிருந்து விபூதி சிறிதளவாக வந்து கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக அறியவருவதாவது இது கடந்த நான்கு தினங்களாக மேல் வரிசையிலுள்ள திருவுருவப் படத்திலிருந்து விபூதி தோன்றி நேர் கீழேயுள்ள மற்றைய ஸ்ரீ சத்திய சாயி பாவாவின் படத்தில் வீழ்ந்து சுவாமியின் திருவுருவப்படத்தின் காலடியில் குவிந்தவண்ணம் உள்ளது.















