இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற புகலிடப் கோரிக்கையாளர்களது படகு கொக்கோஸ் தீவுக்கருகில் பாறையில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கோஸ்தீவிலிருந்து 200km தூரத்தில் இலங்கையிலிருந்து 67 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் சென்ற படகு நேற்றுக் காலை 8 மணியளவில் கற்பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்ட அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் படகு பாறையில் மோதியதையடுத்து குறித்த அகதிப் படகிலிருந்து நான்கு ஆண்கள் கொக்கோஸ் தீவை நீந்திக் கரையேறியுள்ளனர்.

கரையை அடைந்தவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவைச் சேர்ந்த ஒருவர் அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியுள்ளார்.

அத்துடன் கரையைச் சேர்ந்தவர்கள், குறித்த நபரிடம் தமது படகு பாறையில் சிக்கிக் கொண்டமை பற்றியும் அவர்களைக் காப்பாற்றுமாறும் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து ஜக் ஓ டோனல்ட் , பொலிஸாருக்கு தெரியப்படுத்தி ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களையும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் சுகாதாரம் மற்றும் உடல்நிலைகளை அறிவதற்காக கொக்கோஸ் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்பவர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களில் பலர் கடற்பரப்பபில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் கடற்பரப்பில் நிகழும் விபத்துக்களால் உயிரிழந்தும் உள்ளனர்.

எனினும் இந்த சட்டவிரோத சம்பவத்திற்கு தொடர்புடைய பலரும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...