நீர்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவரும், சுவிஸில் வாழ்பவருமான ஏழு வயதேயான கமலநாதன் பவித்திரா என்ற சிறுமி தன் தாயகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் நீர்வேலி செல்லக்கதிர்காம சுவாமி திருக்கோயில் கதிர்காம தீர்த்த உற்சவத்தில் (02.08.2012 வியாழக்கிழமை) கலந்து கொண்டு உற்சவ நிறைவில் ‘தமிழின் செழுமை’ பற்றி பதினைந்து நிமிடங்கள் சிறப்புரையாற்றினார்.
அந்நிய மண்ணில் வளர்ந்த போதும், இந்த மண்ணின் பெருமையை நிலை நாட்டும் வகையில் சிறந்த கட்டமைப்பு, செழுமையான உச்சரிப்பு, உணர்வுகளை வெளிக்காட்டும் கைகள் என்று உரையாற்றி வரும் இச்சிறுமியை நாமும் பாராட்டுவோம்.(நன்றி நீர்வேலி இணையம்)இந்த சிறுமியையும் இவரின் பெற்றோரையும் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரும் வாழ்த்துகின்றனர்.















