புதியதோர் உலகம் செய்வோம்  

புன்னகை தினமும் மலரச் செய்வோம்  

வறுமையை போக்கச் செய்வோம்  

வாழ்க்கையை வெல்லச் செய்வோம்  

சிறுமை வாழ் நீங்கச் செய்வோம்  

சிந்தனை நிதம் வளரச் செய்வோம்  

விண்வெளி தன்னில் செல்வோம்  

வீரனாய் என்றும் வாழச் செய்வோம்

 ஒருவனின் வழியில் செல்வோம்  

உண்மைதனை உலகிற்கு சொல்வோம்

 அன்னையை மதித்தே செல்வோம்  

அன்னை மண் காத்தே வெல்வோம்

 புதியதோர் உலகம் செய்வோம்  

புத்தி‌ஐீவிகளாய் என்றும் வாழ்வோம்.‌  

கவியாக்கம் : ஆனைக்கோட்டை தமிழ்நேசன் (1998)

நன்றி: ஆனைக்கோட்டை இணையம்