பன்னிரண்டு வயதில் பார்த்தவள் – என்

பார்வையிலே ‌ அவள் பூத்தவள்!

கண்ணிரண்டு விழியால் கதை சொன்னவள் – என்

கவிதைக்கு முகவரி அவள் ஆனவள்!

ஐந்து வயதில் என் அறிமுகம்

ஆசைப்பட்டாள் அவள் என்னிடம்!

எண்ணிரண்டு வயது வரும்வரை

எண்ணி என்னைத் தினமும் இருந்தவள்!

பள்ளி செல்லும் போது பார்த்தவள்

பருவ மங்கை தான் இவள்!

வெண் நிலவுக்கு எதிர் ஆனவள்

வெள்ளிக்கிழமையில் தனி இவள்!

காவிரி ஆற்றின் பின்னல் கொண்டாள்

கங்கை போல நடை உடையாள்!

காதலி என்று சொல்லுகின்றேன்

கனவில் தினமும் எண்ணுகின்றேன்!

மின்னலுக்கு வெளிச்சம் கொடுத்தவள்

மின்னி எந்தன் கண்ணை பறித்தவள்!

மிஞ்சியது எல்லாம் வஞ்சியின் எண்ணம்

பிஞ்சு மலரே நீ என் சொந்தம்!

கவியாக்கம் : xxxxxxxxxx( 1992)

யார் இந்த காதலர்கள்?? இங்கு சொடுக்குங்கள்… புகைப்படம் இணைப்பு