பிறப்பிலேயே ஊனம் உடையவர் சீன நாட்டுப் பெண் Zheng Huamei. இவரது கைகளில் இரண்டும் செயல்படவே மாட்டா. ஆனால் இவர் பாதங்களைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றார்.

பாதங்களால் உணவு உண்கின்றார். அத்துடன் பாதங்களால் ஓவியங்கள் வரைகின்றமையுடன் தையல் வேலைகளையும் செய்து வருகின்றார்.

இத்திறமைகளை வளர்த்துக் கொள்கின்றமைக்காக ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் பயிற்சிகள் செய்கின்றார்.

ஊனம் காரணமாக வெளியிடங்களில் தொழில் எதுவும் பெற முடியாத நிலை இவருக்கு. ஆனால் சொந்த ஓவியங்கள் மற்றும் தையல் வேலைப்பாடுகள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்து ஊதியம் சம்பாதிக்கின்றார்.