எம் இனிய சிறுப்பிட்டி மேற்கு சுவிஸ் வாழ் உறவுகளே உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் நீங்கள் எமது பெரியோரை மதித்து அவர்களை இந்த உலகத்தில் நல்ல மனிதர்களாக உயர்த்தி கெளரவித்ததை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லோரும் இருக்கும்பொழுது அவதூறாக பேசி இறந்தபின் பெருமையாக அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் நீங்களோ அவர்கள் இருக்கும்பொழுதே அவர்களை கௌரவித்து அன்பளிப்பும் வழங்கியுள்ளீர்கள். உன்மையிலேயே நாம் எதிர்பார்க்கவில்லை எமது தந்தைக்கு உறவுகள் இருக்கும் என்று. ஆனால் நீங்கள் எல்லோருக்கும் உதவுவதற்காக இருக்கிறீர்கள் என்று நிருபித்து விட்டீர்கள். இத்தோடு நிறுத்திவிடாது எமது ஊரை முன்னேற்றுவதில் முழு அக்கறை எடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்ல ஞானவைரவபெருமானை வேண்டி, உங்கள் குடும்பங்களும் வாழ வாழ்த்தி விடைபெறுகிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...