தொடர்ச்சி…
இவர்களின் பெருமுயற்சியாலும் இவர்களுக்கு உதவியாக உழைத்த அடியவர்களின் ஒத்துழைப்பினாலும் கருவறை, அர்த்தமண்டபம், மிகாமண்டபம், இஸ்தம்பமண்டபம் என்பன கட்டிமுடிக்கப்பட்டு இவ்வாலய அமைப்புக்கேற்றவாறு பழைய கிணறு நிரப்பப்பட்டு புதிய திருமஞ்சக் கிணறும் அமைத்து முடித்து கருவறையில் முன்பே வழிபட்டு வரப்பட்ட ஞானவைரவர் விக்கிரகமும், புதிதாக ஆலயத்துள்ளே வலப்பக்கத்தில் பிள்ளயார் விக்கிரகமும், இடப்பக்கத்தில் முருகன் விக்கிரகமும், வடக்கு வீதியில் முதலியார் {தற்போது சிவலிங்கம்} என ஒரு கல்லையும் இஸ்தாபித்து 1954ம் ஆண்டு தை மாதம் 4ம் நாள் திங்கட்கிழமை அத்த நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஆலயத்தில் நித்திய நைமித்திய பூசைகளும் காலத்துக்குக்காலம் விசேட பூசைகள் பஜனைகள் என ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக ஆல்யம் வளர்ந்து வந்தது. ஆலயம் அமைந்த காலம் தொட்டு சொத்தியப்ப என்று அழைக்கப்படும் செல்லப்புவுக்கு உதவியாக ஆலய தொண்டுகளிலும், ஆலய வளர்ச்சியிலும் இன்றுவரை முக்கிய பங்கற்றியவர்களாக எம்முடன் வாழ்ந்துவரும் சைவப்ப என்று அழைக்கப்படும் தம்பு இராமநாதன் அவர்களையும், சின்னையா வைத்தியலிங்கம் அவர்களையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

.
இதனைத் தொடர்ந்து காலத்திற்குக்கலாம் ஆலய பரிபாலனத்தை மேற்கொண்டுவரும் பரிபாலன சபைகளின் முயற்சியால் ஆலயம் வளர்ச்சிப்பாதையில் சென்று மணிக்கூட்டுக்கோபுரம், மடைப்பள்ளி, வசந்தமண்டபம், பிள்ளையார் ஆலயம், முருகன் ஆலயம், நவக்கிரகம், சிவன் ஆலயம், வாகனசாலை, சுற்று மதில், கிணறு, வெளிமண்டபம், தேர், தேர்முட்டி, உள்வீதிமண்டபம் அமைத்தல் நீர்விநியோகம் என பல திருப்பணி வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஆலய பூஜைகளும் முன்னேற்றமான பாதையில் சென்று நித்தியபூஜை, விஷேட நாட்களுக்கான உற்சவம், வெள்ளிக்கிழமை நாட்களுக்கான பூஜைகள், தேர்த்திருவிழாவோடு கூடிய அலங்கார உற்சவமும் அத்துடன் காலம் தவறாது கும்பாபிஷேகமும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. திருப்பணி வேலைகள், உற்சவங்கள் போன்றவற்றி ற்கு இக்கிராமத்தை சேர்ந்த அடியவர்களினதும், வெளிநாட்டில் வாழும் இவ்வூர் அடியவர்களினதும் பங்களிப்புக்களே தாராளமாக கிடைத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

முற்றும்…     பாகம்1        பாகம் 2