சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலையம் அன்பின் சிறுப்பிட்டி இணைய நிர்வாகத்தினரே! வணக்கம்….. கடந்த சில வாரங்களாக சிறுப்பிட்டி இணையத்தை பார்வையிட்டதில் உங்களது கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் வாழும் சில சிறுப்பிட்டி மக்களின் கருத்துக்கள் மிகுந்த கவலையையும் மனவேதனையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான கருத்துக்கள் எமது கிராமத்துக்கும் வெளிநாடுகளில் வாழும் எமது மக்களுக்கும் எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஜயமில்லை.

 ஒரு சிலரின் பண்பாடற்ற கருத்துக்கள் இணையத்தில் வரும் செய்திகளை ஆராய்ந்து வெளியிடாமை எல்லாவற்றுக்கும் மேலாக இணையநிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் எமது ஊரில் கௌரவத்தையும் தன்மானத்தையும் உலகளாவிய ரீதியில் இழக்க செய்யும் செயலாகும்.

 இவ்வாறான செயல்கள் எமது கிராமத்தின் ஒற்றுமையையும் எதிர்காலத்தில் செய்யும் நற்பணிகளையும் பாதிக்கும் என்பதனை கூறிக்கொள்கின்றோம். நீங்கள் எங்கள் கிராமத்தில் செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வினை நாம் பாராட்டுகின்றோம்.

 ஆனால் செய்யப்பட்ட முறையினை நினைத்து கவலையடைகின்றோம். எமது சனசமூக நிலையத்துக்கு என்று ஒரு நிர்வாகம் இருக்கிறது அதன் ஊடாக எவ்வித நிகழ்ச்சியையும் நடாத்தியிருந்தால் வரவேற்கத்தக்கது.

ஆனால் உங்கள் இணையத்தில் வரும் கருத்துக்கள் எமது கிராம ஒற்றுமையை சீர் குலைப்பதற்கு வழிவகுக்காமல் இருந்தால் எமது கிராமத்திற்கு நல்லது.

எனவே உங்கள் இணையம் என்றவுடன் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என்று நினைத்து ஒருபக்க சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் எந்த ஒரு செய்தியினை வெளியிடும் போது அதன் உண்மைத்தன்மையினை உறுதிப்படுத்தி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவே இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு ஊடக தர்மத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இனிவரும் காலங்களை வளமாக்க வழி செயவோம் எனக்கூறி விடைபெறுகின்றோம்.

ஓற்றுமையே உயர்வு தரும்.

 நன்றி. நிர்வாகத்தினர்.(அனுப்பிய மின்னஞ்சல்: siruppiddypoomakal@gmail.com )

பின்குறிப்பு: நன்றி உங்கள் மனம் திறநது உரிய இடத்துக்கு இந்த தகவலை முதல் முறையாக  அனுப்பி இருந்தமைக்கு இதற்க்கான நிர்வாகியின் பதில் இந்த இணையத்தில் கட்டாயம் இணைக்கப்படும்.இந்த இணையம் இணைப்பதற்கே இணைந்து செயலாற்றுவதற்ற்க்கு கிராமத்தையும் தாண்டி செயல் பட்டு  இருக்கின்றது. உங்கள் ஆதங்கங்களின் உண்மை கருதி இணையத்தில் பதிவிடப்படுகின்றது .நன்றி இணைய நிர்வாகி.. விமல் குமாரசாமி