பிறந்து ஒரு மாதமேயான சிசு ஒன்றின் சடலம் சுன்னாகம் மின்சார நிலைய வீதிப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது. தகவலொன்றினை அடுத்து சுன்னாகம் காவற்றுறையினர் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், சடலம் நீலம் பாரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று சம்பவ இடத்தில் மல்லாகம் மாவட்ட நிதவான் விசாரணைகளை மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.