யாழ். மாவட்டத்தில் கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 96 பேர் சிக்கியுள்ளனர்.இவர்கள் நீதிமன்றங்களில் 40 லட்சம் ரூபாவை அபராதமாகச் செலுத்தியுள்ளனர்.மின்சார சபையின் யாழ். அலுவலக உயர் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
யாழ். மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்களின் அதிகரிப்புக் காரணமாகப் பொலிஸாருடன் மின்சாரசபையினர் அண்மைக்காலங்களில் மேற்கொண்ட அதிரடி நடவடிக் கைகளின்போது இவர்கள் கை யும் மெய்யுமாகப் பிடிபட்டனர். இவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு, 40 லட்சம் ரூபாவை குற்றப் பணமாகச் செலுத்தியுள்ளனர்.கடந்த ஜனவரி மாதம் சாவகச்சேரி மற்றும் குளப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் 15 பேர் பிடிக்கப்பட்டு 3 லட்சத்து 69 ஆயிரத்து 377 ரூபா அபராதமும் கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் 21 பேருக்கு 14 லட்சத்து 8 ஆயிரத்து 105 ரூபா அபராதமும் கடந்த மார்ச் மாதம் குளப் பிட்டி, வட்டுக்கோட்டை ஆகிய பிரதேசங்களில் 33 பேருக்கு 10 லட்சத்து தொள்ளாயிரத்து 12 ரூபா அபராதமும்
கடந்த ஏப்ரல் மாதம் குளப் பிட்டி, வட்டுக்கோட்டைப் பகுதி களில் 27 பேருக்கு 11 லட்சத்து 84 ஆயிரத்து 312 ரூபா அபராதமும் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டது.இனிவரும் காலங்களிலும் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.