சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினர் தங்கள் முன்னெடுப்புக்களையும் எதிர் கால முன்நகர்வுகளையும் மிகச்சிறப்பாக தெளிவுடன் கலந்துரையாடியதை உங்களுக்காக பதிவிடுகின்றோம்.அவர்களின் சிலரே ஆனாலும் அனுபவமுள்ள கிராமத்து பெரியவர்களுடனும் வெளிநாட்டில் இருக்கும் முன் அனுபவம்முள்ள நண்பர்களுடனும் தொடர்புகளை மேற்க்கொண்டு தமது முடிவுகளை எடுத்து செயல் படுத்துவதன் காரணமாக அவர்களின் ஆளுமையும் செயல் திறனும் கிராமத்திலையே உணர முடிகின்றது.  இணைய நாகரிகம் காரணமாக முடிந்தவற்றை உங்களுக்கு பதிவிடுகின்றோம்

 *சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துக்கு தொடரான மாத பங்களிப்பு முறை ஆரம்பிக்கப்படுள்ளமை

*சிறுப்பிட்டிமேற்கு  ஒன்றிய கூட்டங்களில் கிராம   நலன் விரும்பிகள் எவரும் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கொடுத்தல்

 *இருப்பில் இருக்கும் பணத்தைக்கொண்டு உடனடி தேவைகளை விரைவாகவும் உதவி தேவைப்படுபவர்களுக்கான தொழில் வசதிகளை செய்து கொடுத்து நிலையான வாழ்வுக்கு வழி ஏற்படுதிக்கொடுத்தல்.

* நிர்வாகக் கூட்டத்தில் தொடராக கலந்து கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப்படுத்தும் வரை நிலையாக இருத்தல்

*சுவிசில் நடக்க இருந்த கலை விழாவை முன்மொழிந்தவர்களே முட்டுக்கட்டை போட்டு கட்டுப்பாடுகளை விதித்து குலைக்க நினைத்த காரணத்தால் அதை முன்னெடுக்க வந்த நல்லுள்ளம் கொண்ட அமைப்பினருக்கு எமது சிறுப்பிட்டி மேற்க்கு ஒன்றியம் அந்த நிகழ்வை முன்னின்று குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் சிறப்பாக செய்து கொடுத்தல்.

*ஆம் அது சிறுப்பிட்டி உறவுகளின் கலை விழா அங்கு விரும்பி வருபவர்கள் அனைவருமே எமது உறவுகள்தான்.

*இந்த சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் ஒன்றியதினருடனோ அமைப்புக்களுடனோ இணைந்து நியாயமான செயல்களுக்கு கைகோர்த்து செயல்படும்.

*எமது கருத்துகளையும் செயல் பாடுகளையும் இனம் கண்டு பதிவிடும் இந்த சிறுப்பிட்டி நெட் இணையத்தின் நிர்வாகத்தில் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் அவர்கள் எமது ஒன்றியத்தில் இருப்பதற்காக எந்த வித ஆளுமையும் செய்யாது. அதை அவர்களும் பல ஒன்றிய நிகழ்வுகளில் நினைவு படுத்தியுள்ளார்கள்.

நாம் தொண்டர்களே எம் தலைவர் பங்களிக்கும் நீங்களே

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்