செம்மணி வீதி, நல்லூர் ஓட்டு மடம் வீதி ஆகியவற்றைக் காப்பெற் வீதியாக மாற்றியமைக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது இந்த வீதிகளை அமைப்பதற்கு மதிப்பீடு செய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றன எனவும் அவர் கூறினார்.ஏற்கனவே நகரில் ஸ்ரான்லி வீதி, கொழும்புத்துறை பிரதான வீதி,பழையபூங்கா வீதி என்பன காப்பெற் வீதியாக மாற்றப்பட்டுள்ளன.யாழ். மாநகரப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள சகல வீதிகளும் காப்பெற் வீதியாக மாற்றப்படவுள்ளன எனவும் இதன் அடுத்த கட்டமாக செம்மணி வீதி, நல்லூர்  ஓட்டுமடம் வீதி என்பன காப்பெற் வீதியாக மாற்றப்படவுள்ளது எனவும் அவர்மேலும் தெரிவித்தார்.