தீபாவளித்திருநாளை   கொண்டாடும் இணைய வாசகர்கள்  அன்பர்கள், நண்பர்கள், அனைவருக்கும் எமது  உள்ளம்  கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி ஆகவே இன் நன் நாளில் இருந்து நல்லதையே நினைத்து நற்காரியங்களை முன்னெடுக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களுடன் இணைந்து நாம் வாழும் போதே மற்றவர்களையும் வாழ வைப்போம் என்பதற்கு அமைய இந்த இணையம் என்றும் பணிபுரியும் என்று கூறி தொடர்ந்து ஒன்று பட்டு பயணிப்போம்

தீபாவளி: பெயர்வரக்காரணம்(‚தீப ஒளி‘ என்பதே காலப்போக்கில், பேச்சு வழக்கில் ‚தீபாவளி‘ என்றானது.)
 
‚தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ‚ஆவளி‘ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.