யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலிலுள்ள  இந்தன் முத்துவிநாயகர் கோயில் தீர்த்தக் கேணியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை புளியங்கூடலைச் சேர்ந்த எ.எழிலரசன் என்ற 10 வயதுசிறுவனே  சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

நேற்று காலை மேற்குறித்த கோயிலில் நடைபெற்ற தீர்த்தத் திருவிழாவிற்கு சென்ற சிறுவன் வீடு திரும்பாமையால் அவனது பெற்றோர் ஊரெங்கும் தேடியவேளை சிறுவன் தீர்த்தக்கேணியில் சடலமாக இருப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக பெற்றோர் காவற்றுறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அச்சிறுவனின் சடலம் காவற்றுறையினரால் மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊர்காவற்றுறை காவற்றுறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.