குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு அதிக எடை போடுதல், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகள் குறைவு என ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோரோடு அமர்ந்து வாரத்தில் 3 வேளையாவது உணவருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது 12 வீதத்தால் குறைவாக இருப்பதாக எல்லா ஆய்வுகளுமே தெரிவிக்கின்றன.
இவ்வாறானவர்களில் வேண்டாத உணவுப்பொருட்களை உண்பவர்கள் 20 வீதம் குறைவாகவும், சாப்பாட்டு பிரச்சினை, சாப்பிடாமல் இருப்பது என்பன 35 வீதம் குறைவாகவும் மரக்கறி மற்றும் இதர ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உண்பவர்கள் 24 வீதம் அதிகமாகவும் உள்ளனர்.
குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்துகையில் போசாக்குப் பயன்பாடு அதிகமாக இருப்பதாக மனோத்தத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் என்பது இவர்களது கருத்து.
ஐக்கிய அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு நிலையத்தின் கருத்துப்படி கடந்த 3 தசாப்தங்களாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பானது 3 மடங்கு உயர்ந்துள்ளது.
அத்தோடு இந்த எண்ணிக்கை 2008இல் 20 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.
இந்த அதிக உடல் பருமன் குழந்தைகளின் சுய மதிப்பீட்டைக் குறைத்து அவர்களை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு ஆளாக்குகிறது.
இந்தப் புதிய ஆய்வானது 2 முதல் 17 வயதுடைய 1லட்சத்து 83ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டு கண்டறியப்பட்டது.
எல்லா ஆய்வுகளுமே வீட்டில் குடும்பமாக அமர்ந்து உண்ணுவது சிறந்த போசாக்கு உணவைப் பெறக்கூடிய நல்லதொரு வழியாகவே சுட்டிக்காட்டுகின்றன.
Hi there! I recognize it is somewhat away from subject although I’d discovered I might check with. Will you be keen on swapping back-links or possibly invitee publishing your blog report or simply viceversa? Our site looks at the vast majority of exact same topics because you but we might dramatically gain from 1 another. For anyone who is interested feel free to ship people an email. My partner and i anticipate hearing from everyone! Good blog page furthermore!