கிணற்றில் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ரவி அமிலன் (வயது 10) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரார்.
 
இவர் பாடசாலை முடிந்தவுடன் கிணற்றில் தனியாக குளிக்க சென்றுள்ளார். ஆயினும் பின்னர் இவர் திரும்பாத
நிலையில் பெற்றோர் சென்று பார்த்தபோது சடலமாக மிதந்து கொண்டிருந்துள்ளார் .
 
இது தொடர்பாக பருத்தித்துறை காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம்
பிரேத பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது