ஒற்றுமையே உயர்வு தரும்:  அன்பின் சிறுப்பிட்டி பூமகள் சனசமூக   நிர்வாகத்தினரே‼ வணக்கம்  „இணைய நிர்வாகத்துக்கு வந்த சிறுப்பிட்டி மேற்க்கு பூமகள் நிர்வாகத்தினரின் மின்னஞ்சல்“ என்ற தலைப்பில் இணையத்தில் பதிவிட்டிருந்தேன் நானும் நிர்வாகியின் பதில் இந்த இணையத்தில் கட்டாயம் இணைக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தும் இதுவரை  இணைக்கவில்லை. இரு நிர்வாகத்தினருக்கும் எதுவித தொடர்புகளும் இன்றுவரை இல்லை.உங்களின்  இணையம்  மீதான குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமோ  அல்லது உங்களின் மேல்  உள்ள தவறுகளை உணர்த்தவோ இந்த வெளிப்படையான பதிவை   நான் இணைக்கவில்லை.இங்கு முக்கிய கருப்பொருள் இதுவே

 சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி மேற்க்கு ஒன்றியமும் வேறில்லை இரண்டும் ஒன்றே இதை பிரித்துப்பார்ப்பதோ பிரிக்க நினைப்பதோ இவை  இரண்டும் இருக்கும்வரை  முடியாத ஒன்று .ஒன்றியத்தில் இருப்பவர்களே இந்த இணையத்தையும் இயக்குகின்றனர்.இருப்பினும் இவை இரண்டும் தங்களுடைய பணியை சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செய்வதற்கு நாமே  சில கட்டுப்பாடுகளை வைத்து செயல் படுகின்றோம் அவ்வளவே.இணையம் எந்த ஒன்றியத்துக்கோ அமைப்புகளுக்கோ கட்டுப்படாது  அதே போல் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்துக்கு எந்த கிளை ஒன்றியமோ அமைப்புக்களோ இன்றுவரை செயற்பாட்டுடன் இல்லை இவை இரண்டினதும் பணிகள் ஊரில் இருக்கும் உங்களுக்கு நான் தெரிவிக்க வேண்டியது இல்லை. சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிர்வாகத்தினருக்கு இந்த இணையம் சொல்லவருவது இதுதான் எம்முடன் ஏதாவது ஒரு வகையில் நேரடி தொடர்புகளை மிகவிரைவில் ஏற்படுத்துங்கள்  சனசமூக நிலையத்துக்கான உடனடி பங்களிப்பை(உதவிகள் ) செய்வதற்கு சில ஊர் நலன் விரும்பிகள்   முன்வந்து இணையத்தை அணுகியுள்ளனர் செய்வீர்களா ??

ஒன்று பட்டு செயல் பட்டால் எமக்கும் நல்லது ஊருக்கும் நல்லது இல்லையேல் நட்டம் எமக்கில்லை கிராமத்து உறவுகளுக்கே. குறுகியகாலதுக்குள் இந்த இணையம் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். விரைந்து செயல்படுங்கள்.உங்கள் பதில் இணையத்தில் பதிவிடப்படும் ஒன்றியத்திலும் பகிரப்படும். 

தொடர்புகளுக்கு :-infosiruppiddy@gmail.com

இணைய நிர்வாகி :விமல் குமாரசாமி