கைதடியில் பட்டப்பகலில் வீடுடைத்து நகைகள், ஒரு தொகைப் பணம் சூறை கைதடி கோப்பாய் வீதியில் கைதடி அஞ்சல் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள வீட்டுக்குள் பட்டப்பகலில் அத்துமீறி நுழைந்த திருடர்கள், பெறுமதிமிக்க தங்க நகைளையும் ஒரு தொகைப் பணம், கையடக்கத் தொலைபேசி போன்றவற்றையும் அபகரித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டக்காணியில் வீட்டார் வேலை செய்துகொண்டிருந்தவேளை கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பொருள்களைத் திருடிச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.திருட்டுத் தொர்பாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தினர்.