வவுனியா இந்து ஆலயங்களின் ஏற்பாட்டில் விவேகானந்தரின் 150 வது நினைவு நாள் நிகழ்வுகள் சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இன்று காலை 9மணிக்கு நடைபெற்றது. முன்னதாக விவேகானந்தரின் திருவுருவப்படம் தாங்கியவாறு குடியிருப்பு விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் நகரின் வழியாக வந்து, சுத்தானந்த மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலையை அடைந்நது.அங்கு அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. பின்னர் அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றன.