16 வயதுச் சிறுமியொருவர் 27 வயது இளைஞரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம் அடைந்துள்ளார்.கவ்வியங்காடு கேணியடியைச் சேர்ந்த சிறுமியே கட்டப்பிராயைச் சேர்ந்த இளைஞன் இவரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்தவராவார்.

குறித்த சிறுமி உடல்நிலை சரியில்லை எனக் கூறி தாயுடன் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் போது சிறுமி கர்ப்பமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.குறித்த சிறுமியின் தாய் உடனடியாக கோப்பாய் காவல் துறையினரிடம் சென்று முறைப்பாட்டை கொடுத்தார். சிறுமியை விசாரித்த கோப்பாய் காவல் துறையினருக்கு சிறுமி குறித்த இளைஞன் தன்னுடன் நீண்டகாலமாக நெருங்கிப் பழகினதாகவும் தனக்கு பணம் தேவைப்படும் போது குறித்த இளைஞனைக்கேட்ட போது அவ் இளைஞன் தனக்கு 5000 ரூபா தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.தன்னை கொக்குவிலில் உள்ள பாழடைந்த வீட்டில் உடல் உறவு கொண்டதாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

கோப்பாய் காவல் துறையினர் குறித்த இளைஞனைத் தேடி வந்தனர்.ஆயினும் தலைமறைவாக இருந்து வந்த இளைஞனை கடந்த 28ம் திகதி கைது செய்யப்பட்டார். அவ் இளைஞனை 29ம் திகதி யாழ் நீதி மன்றத்தில் கோப்பாய் காவல் துறையினர் ஆஜர் செய்தனர். குறித்த இளைஞனை விசாரித்த யாழ் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஆனந்தராஜா 14 நாட்கள் நீதி மன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.