அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலிய பெஷன் வீக் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹா லக்ஷ்மியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை அணிந்து வந்தமை குறித்து சர்வதேச இந்து மத பீடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹா லக்ஷ்மியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் உடையை பெண் அணிந்துகொண்டது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்துக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மஹா லக்ஷ்மியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடையும் உள்ளங்கியும் இந்து மக்களின் புனித உணர்வை தெய்வீக தன்மையை மழுங்கடிக்கச் செய்கின்றது. 

இதுபற்றி சர்வதேச இந்து மதபீடம் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரதமருக்கும் இந்து மக்களின் கவலையை தெரிவிக்கவுள்ளது என இந்து மத பீடம் தெரிவித்துள்ளது.