கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் ஐந்து போத்தல் கசிப்பு தயாரிப்பதற்கான கோடா மற்றும் கால் போத்தல் கசிப்பு என்பவற்றை வைத்திருந்த ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதி மன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஐந்து போத்தல் கோடா மற்றும் கால் போத்தல் கசிப்பு என்பவற்றை வைத்திருந்த நபர் ஒருவர் வட்டக்கச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாவட்ட நீதிபதி குறித்த நபருக்கு 55 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஐந்து மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.