பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்டு தனது மனைவியை விட்டு விலகி வாழ முடிவு செய்துள்ளார். இத்தகவலை அவர்கள் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா மாகாண ஆளுநராக 7 ஆண்டுகளாக இருந்த அர்னால்டின் பதவிக் காலம் 2011 ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், அடுத்த சில மாதங்களில் அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியினர் திடீரென திருமண வாழ்க்கையில் இருந்து விலக முடிவு செய்திருப்பது உலகெங்கும் உள்ள அர்னால்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட யோசனைக்கும் ஆலோசனைக்கும் பின்னர், நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அர்னால்டும் அவரது மனைவி மரியாவும் தெரிவித்துள்ளனர்.

இனி பிரிந்து வாழ்ந்தாலும், தங்களின் 4 குழந்தைகளின் எதிர்காலத்தில் நாங்கள் கூட்டாகவே செயல்படுவோம் என்றும் அர்னால்டு தம்பதியினர் கூறியுள்ளனர்.